உலகம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்


நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமி: விசாரணைகள் தீவிரம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான சிறுமி ஒருத்தி, 18 வயது இளம்பெண்ணாக திரும்பிவந்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த அலிஷியா (Alicia Navarro), 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.
அவளை ஒன்லைனில் சந்தித்த யாரோ ஏமாற்றி, எங்கோ கொண்டு சென்றுவிட்டதாக அவளது தாயார் புகாரளிக்க, பொலிசார் அவளை தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
இந்நிலையில், திடீரென கனடா எல்லையிலுள்ள Montana மாகாண பொலிஸ் நிலையம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்துள்ளார். தான்தான் காணாமல் போன அலிஷியா என அவர் கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.
ஒரு பக்கம், அலிஷியா உயிருடன் பத்திரமாக வீடு திரும்பிய விடயம் அவளது பெற்றோருக்கும் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம், அவள் எங்கு சென்றால், நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தாள் என்பது குறித்த விடயங்கள் தெரியாததால் பொலிசார் திகைப்படைந்துள்ளார்கள்.
அலிஷியா சற்று ரிலாக்ஸ் ஆக நேரம் கொடுத்துள்ள பொலிசார், அவளுக்கு என்ன ஆனது என்பது குறித்து பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அமெரிக்காவில் ஆய்வு விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்ட யாழ்.தமிழர் - tamilnaadi.com