உலகம்
2 முக்கிய நகரங்களை குறித்து உக்ரைன் தாக்குதல்
2 முக்கிய நகரங்களை குறித்து உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் கிழக்கு உக்ரேனிய பகுதிகள் மீது சனிக்கிழமையான இன்று உக்ரைன் ஆயுதப்படை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து இருக்கும் நிலையில் ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆரம்பம் முதலே ரஷ்யாவிற்கு தடுப்பு தாக்குதலை நடத்தி வந்த உக்ரைன் ராணுவ படை, மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான ஆயுத உதவியை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ரஷ்ய படைகளுக்கு எதிராக எதிர்ப்பு பதிலடி தாக்குதலை உக்ரைன் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சனிக்கிழமை அதிகாலை டொனெட்ஸ்க் மற்றும் மக்கிவ்கா நகரங்கள் மீது உக்ரைனிய ஆயுதப் படை தாக்குதல் நடத்தியுள்ளது என சுதந்திர பகுதியாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின்(DPR) கூட்டுக் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைனிய படைகள் 155மிமீ கலிபர் குண்டுகளை பயன்படுத்தியதாக டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து தானியங்களை விநியோகம் செய்யும் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதை அடுத்து இருநாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகமாக காணப்படுகிறது.
You must be logged in to post a comment Login