tamilni 337 scaled
உலகம்செய்திகள்

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

Share

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

ரஸ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் உக்ரேனிலிருந்து தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்த கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் இருந்து ரஷ்யா விலகிக் கொண்டது.

இந்த நடவடிக்கையானது ஆசிய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரேனின் ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சியானது வேறு நாடுகளில் இருந்து தானிய வகைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு திட்டத்தின் கீழ் 46 வீதமான தானிய வகைகள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 40 வீதமான தானியங்களும், 12 வீதமான தானிய வகைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்கிரனின் தானிய வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்படுகின்றது.

நான்கில் ஒரு பகுதி அதாவது இருபத்தைந்து விதமான பொருட்களை சீனா இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது ஆசிய நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தானிய வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் போர் காரணமாக இவ்வாறு உணவு பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு ஆசிய நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என சர்வதேச ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...