பெலாரஸுக்கு அனுப்பப்படும் வாக்னர் கூலிப்படை வீரர்கள்
வாக்னர் கூலிப்படை வீரர்கள் பெலாரஸ் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்பியதை தொடர்ந்து ஜனாதிபதி புடினால் கூலிப்படை அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் கூலிப்படை அமைப்பின் தலைவர் பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் விரைவில் கொல்லப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஜூன் 29ம் திகதி வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தகவல் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வாக்னர் கூலிப்படையில் இருந்த வீரர்கள் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின்படி, வாக்னர் கூலிப்படை வீரர்கள் பெலாரஸ் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருவதாக தெரியவந்துள்ளது.
குடியரசு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை வீரர்கள் பெலாரஸில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.
பெலாரஸ் நாட்டிற்கு வந்து இறங்கிய வாக்னர் படை வீரர்கள் பயிற்சி மற்றும் போர் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக துப்பாக்கி தளங்களுக்கு பிரித்து அனுப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல் படி, பெரும்பான்மையான வாக்னர் படை குழுக்கள் இன்னும் பெலாரஸ் நாட்டிற்கு வந்து சேரவில்லை என்றும், கண்காணிப்புக் குழுவான பெலாருஸ்கி ஹயூன் தகவல்படி, கிட்டத்தட்ட 200 வீரர்கள் மட்டுமே பெலாரஸுக்கு வந்து இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களும் Vitsebsk அருகே உள்ள Losvido என்ற பகுதியில் உள்ள துப்பாக்கி தளத்தில் பெலாரஸ் ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி சூடு பயிற்சியை வழங்க தொடங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment