இந்தியா
கல்லூரியில் சக மாணவியை எரித்த மாணவி!


கேரள மாநிலத்தில் இயங்கி வரும் வெள்ளையணி வேளாண்மை கல்லூரியளில் சக மாணவியை மற்றொரு மாணவி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு மாணவிகளும் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் திருவல்லம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.