உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கும் ஜப்பான்!
ஜப்பான், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்குவதாக இன்று (24) அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நடந்த விழாவில், ஜப்பானிய துணை பாதுகாப்பு மந்திரி டோஷிரோ இனோ, நன்கொடையில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரேனிய தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார்.
“படையெடுப்பு விரைவில் முடிவடைந்து, அமைதியான அன்றாட வாழ்க்கை திரும்பும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று இனோ கூறினார்.
மற்ற நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை வழங்கியுள்ள நிலையில், ஜப்பான் தனது நன்கொடைகளை மரணம் அல்லாத உபகரணங்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஜப்பான் உக்ரைனுக்கு குண்டு துளைக்காத உள்ளாடைகள், ஹெல்மெட்கள், எரிவாயு முகமூடிகள், ஹஸ்மத் சூட்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment