ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டம் !
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், நாட்டு கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.
சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும், அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் நாளை அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். தற்போது இந்தியாவில் உள்ள மூன்று கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த பண்ணைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாட்டின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதன் காரணமாக புதிய பண்ணைகளை இனங்கண்டு மேலதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment