1843833 china
உலகம்செய்திகள்

தைவானை நோக்கி படையெடுக்கும் போர் விமானங்கள், கப்பல்கள்

Share

உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது.

இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவ்வப்போது சீனா, தைவான் எல்லைக்குள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது.

மேலும் தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டு எல்லையில் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.

இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று தைவானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பி உள்ளதாக தைவான் கூறி உள்ளது.

இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது. 3 போர் கப்பல்களும் தைவானின் கடல்பரப்பில் ஊடுருவி இருக்கிறது. என கூறப்பட்டு உள்ளது.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் எல்லைப்பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி உஷார்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சீனா-தைவான் எல்லைப் பகுதியில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...