ezgif 3 5126aa70b6
உலகம்செய்திகள்

துருக்கியில் கனமழை – 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து சென்றது வெள்ளம்

Share

துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.

மேலும் வெள்ளத்தின் வேகத்தில் சில பாகங்களும் இடிந்து விழுந்தன. மழையின் வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போது கார்கள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து காணப்பட்டன. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் அங்கு பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1763526428 PHON 6
செய்திகள்இலங்கை

தொலைத்தொடர்பு வரிச் சுமை: இணைய சேவைக்கு 20.3%, குரல் அழைப்புகளுக்கு 38% வரி – TRC அதிகாரிகள் உறுதி!

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள், இணைய சேவைக்காக 20.3% வரியையும், சாதாரண குரல் அழைப்புகளுக்காக (Voice...

24 671cb473e1c4c
செய்திகள்இலங்கை

சுற்றுலாத் தலங்களில் இரட்டைப் பாதுகாப்பு: சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸ் கண்காணிப்புத் தீவிரம்

பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள காவல்துறை...

691cc63de4b0849d3c3c4866
செய்திகள்உலகம்

நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில்...

image c40cb1ef0e
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணை இறுதிக்கட்டத்தில்: விரைவில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் – சட்ட மாஅதிபர் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்தி வரும் விசாரணை...