புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Ranil

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று (01) காலை மலேசிய பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே தமது விருப்பம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராகிம் கடந்த 24 ஆம் திகதி தெரிவானார்.

#SriLanka #world

Exit mobile version