தென்கொரியாவுக்குள் புகுந்த போர் விமானங்களால் பரபரப்பு!

china russia

தென்கொரியாவின் வான் பகுதிக்குள் சீன, ரஸ்ய போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் பாம்பர் ஜெட்கள், ரஸ்யாவின் ஏவுகணை தாங்கிய ஜெட்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்தன. உடனே தென் கொரியாவின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பறந்தன.

அந்த விமானங்கள் வருவதற்குள் சீனா, ரஸ்ய விமானங்கள் அங்கிருந்து வெளியேறின. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு சீனா உறுதுணையாக இருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் வட கொரியாவுக்கு அதன் நட்பு நாடான சீனா, அறிவுரை வழங்கி ஏவுகணை சோதனையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், தென் கொரியா எல்லைக்குள் போர் விமானங்கள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#World

Exit mobile version