உலகம்

இத்தாலி நிறுவனத்தால் மிதக்கும் நகரம்!

Published

on

சவூதி அரேபியாவில், 293 ஆயிரம் கோடி ரூபா செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர்.

1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

கடலில் எங்கும் நிற்காமல் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த பிரம்மாண்ட கப்பலில், ஒரேநேரத்தில் 60 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும். 200 முதல் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த பாஞ்சியோஸ் கண்டத்தின் நினைவாக இதற்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version