உலகம்
சீனாவில் பரவும் புதிய வைரஸ்! – இதுவரை 35 பேர் அடையாளம்
சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட லாங்யா ஹெனிப வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் சீன மருத்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். எனினும் இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக தீவிரமானது அல்ல என்றும் இதனால் பொதுமக்கள் பீதிக் கொள்ள தேவையில்லை என்றும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
#World
You must be logged in to post a comment Login