குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
#World
Leave a comment