MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

Share

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,860.6 பில்லியனாக இருந்த அரச வருமானம், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 24.8% அதிகரித்து 2,321.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

இந்த அரச வருமான உயர்வுக்கு வரி வருமானம் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரி வருமானம் 2,151.1 பில்லியன் ரூபாவாக 25.9% அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 1,709.3 பில்லியன் ரூபாயாக காணப்பட்டுள்ளது.

இந்த வரி வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரி வருமானம், பெறுமதி சேர் வரி வருமானம், சுங்க இறக்குமதி வரிகள், வருமான வரி, விசேட வணிகப் பொருட்கள் மீதான வரிகள், சமூகப் பாதுகாப்பு வரிகள், பெற்றோலியப் பொருட்கள் மூலம் கிடைத்த வரிகள், மதுவரி வருமானம், மற்றும் செஸ் வரி போன்ற பல காரணிகள் முக்கியமாகப் பங்களித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...