boat
உலகம்செய்திகள்

படகு விபத்து! – திருமணத்துக்கு சென்ற 20 பெண்கள் உயிரிழப்பு!

Share

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...