உலகம்
ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு! – 3 பேர் பலி, மர்மநபர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் இண்டியானா நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இண்டியானா மாகாண ஆளுநர் இது தொடர்பில் கூறுகையில்,
கிரென்வுட் பார்க் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் அண்டுக்கு 40,000 மரணங்கள் துப்பாக்கிச் சூடு போன்ற மரணங்களால் நிகழ்கின்றன. அண்மைக்காலமாக இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரித்துள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சிகாகோவில் நடந்த பேரணியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மே 10 ஆம் தேதி பஃபலோ சூப்பர் மார்க்கெட்டில் கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் டெக்சாஸில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். – என்றார்.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக வரும் வாரம் நடைபெறவுள்ளது. இதில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு தடை கொண்டுவரும் பல்வேறு சட்டத்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
You must be logged in to post a comment Login