Flag of the Peoples Republic of China.svg 1
உலகம்செய்திகள்

அதிகரிக்கும் வெப்பநிலை! – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Share

சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஷாங்காய் நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து ஆறு நாட்களாக மிக அதிக வெப்பநிலையைக் காண்கிறது.

கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலை தவிர்க்கவும், நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், அதிக வெப்பநிலையில் வெளியே வரும் தொழிலாளர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அங்குள்ள வானிலை ஆய்வு மையம், மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 அல்லது 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...