lndn
உலகம்செய்திகள்

பிரித்தானிய அரச குடும்பத்தில் மற்றொரு “எலிசபெத்”. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

Share

பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்தப் பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.

இந்த நிலையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் அந்தப் பெண் குழந்தைக்கு “சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அச்சுடன் கூடிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப் பேத்தியான சியன்னா, அவரது தாய் பீட்ரைஸ்-க்கு பிறகு 11-வது இடத்தில் சிம்மாசனத்தில் உள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...