tamilni 409 scaled
உலகம்செய்திகள்

காசாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

Share

காசாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் திகதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கி மேலும் பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, எகிப்து, கட்டார் மத்தியஸ்தம் செய்ததின் அடிப்படையில், 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்படது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கட்டார் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...