south africa
உலகம்செய்திகள்

பாரில் துப்பாக்கிச் சூடு! – 14 பேர் உயிரிழப்பு

Share

மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SouthAfrica

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...