download 12 1 9
இந்தியாஉலகம்செய்திகள்

தனியார் நிறுவனங்களில் 12 மணி வேலைநேரம்!

Share

தனியார் நிறுவனங்களில் 12 மணி வேலைநேரம்!

12 மணி நேர வேலை மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12ஆம் திகதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...