tamilni 426 scaled
உலகம்செய்திகள்

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

Share

நாள் ஒன்றுக்கு 10 பிணைக் கைதிகள்: போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தயாராக உள்ளதாக தகவல்

போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக AFP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாடுகளும் தங்கள் பிணைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறி கொண்டுள்ளனர்.

இதுவரை 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், அதே சமயம் 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

அத்துடன் இந்த போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் 4 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மேலும் 2 நாட்களுக்கு அது நீடிக்கப்பட்டது.

ஹமாஸ் படையினருடன் நெருக்கமான ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் வழங்கிய தகவலில், அதே பழைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழைய நிபந்தனைகளின் படி, இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மாற்றாக, நாள் ஒன்றுக்கு 10 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது, இஸ்ரேலி விமானங்கள், ட்ரோன்கள் காசா மேற்பரப்பில் பறக்காமல் இருப்பது ஆகியவை உள்ளடங்கும்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்றுடன் போர் நிறுத்தம் நிறைவடைந்து இருக்க வேண்டும், ஆனால் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து கத்தாரில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...