R 6
உலகம்செய்திகள்

பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட இந்தியர்கள் பயணித்த விமானம்: விசாரணை துவக்கம்

Share

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா தனியாக விசாரணைகளைத் துவங்கியுள்ளது.

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் நேற்று மும்பை திரும்பியது.

மீதமுள்ளவர்களில் சிலர் ஆட்கடத்தல் தொடர்பில் பிரான்சில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார்கள்.

அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.

அதாவது, இந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், Shashi Kiran Reddy என்னும் நபர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த Shashi Kiran Reddyதான், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நடந்தே நுழைய முயன்று குளிரில் உறைந்து பலியான ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...