china
உலகம்செய்திகள்

திருமணத்தின்போது பேனருடன் போராட்டம் நடத்திய முன்னாள் காதலிகள்

Share

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையில் பேனர் ஒன்றை வைத்து இருந்தனர். அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டபத்திற்கு வெளியே அவர்கள் பேனரை பிடித்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆர்வத்துடன் பார்த்து என்ன நடந்தது என விசாரித்தனர். முன்னாள் காதலிகளுடன் சென்னும் அவரது வருங்கால மனைவியும் தகராறில் ஈடுபட்டனர்.

இருப்பினும், முன்னாள் காதலிகளை பிரிந்ததற்கான காரணங்களை சென் வெளியிடவில்லை. தான் செய்ததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து சென் கூறுகையில்,

பெண்களின் எதிர்ப்பால் தான் கோபப்படவில்லை. கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் இருந்தேன், பல பெண்களை காயப்படுத்தினேன். உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...