Taliban Afghanistan 3
உலகம்

கொலைக்களமாகும் ஆப்கான்! – இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்!!

Share

கொலைக்களமாகும் ஆப்கான்! – இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் கைப்பற்றி வரும் பகுதிகளில் தலிபான்கள் தீவிரவாதிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை தலிபான்கள் நேற்று கைப்பற்றி, அங்குள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 தலைநகரங்களை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

அதே போல் தலைநகர் காபூல் அருகே உள்ள மூன்றாவது பெரிய நகரமான ஹீரத்தையும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அடுத்தடுத்து முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வருவதை அடுத்து, அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தாங்கள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெண்களை தலிபான்கள் குழு கட்டாய திருமணம் செய்கின்றது என்று அமெரிக்க ஊடகமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறியுள்ளது என்று ANI செய்தி வெளியிட்டுள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில், ‘திருமணமாகாத பெண்களை கட்டாயப்படுத்தி தங்கள் குழுவிலுள்ள ஆண்களுக்கு மனைவிகளாக கட்டாயப்படுத்தி மாற்றி வருகின்றன. இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவம் என்று மனித உரிமை குழுக்கள் கூறி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தலிபான்களால் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பிடிபட்ட அரசுப் படை வீரர்களுக்கு மரண தண்டனை அளித்து வருவதுடன், அங்குள்ள பொதுமக்கள் மீது தலிபான்கள் தாக்குதல்கள் நடத்துகின்றன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அந்தப் பகுதிகளில் மக்கள் முன் தோன்றும் தலிபான்கள், நாட்டின் மிகப்பெரிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், ‘தலிபான்கள் வெற்றிபெற வேண்டும்’ என்று கோஷம் போட வைக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், சரணடைந்த ஆப்கானிஸ்தான் இராணுவ உறுப்பினர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ” இது போர்க்குற்றங்களை உருவாக்கும்” என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக நகரங்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள தலிபான்கள் முன்வர வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...

articles2FaXBMDMk4nbUccDfIluBv
செய்திகள்உலகம்

டாவோஸில் காஸா அமைதி சபை சாசனம் கையெழுத்து: ட்ரம்ப்பின் அதிரடித் திட்டத்தில் இணைந்தன 35 நாடுகள்!

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது வருடாந்தக் கூட்டத்தில், காஸா...

26 6971e601c561f
உலகம்செய்திகள்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் படுகொலை!

காசாவில் நேற்று (21) இஸ்ரேல் இராணுவம் நடத்திய மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...