Covid
உலகம்செய்திகள்

ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா

Share

ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா

ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த ஐந்து நாள்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக வீசக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் இறுக்கமாகப் பேணப்படுகின்ற நிலையில் மறுமுனையில் கொரோனாத் தொற்று பதிவாகிக்கொண்டே உள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரில் ஒலிம்பிக் தொடர் கடந்த 23ஆம் திகதியிலிருந்து நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்டது. இந்தத் தொடரால் கொவிட் தீவிரமாகலாம் என்றும் ஒலிம்பிக் தொடர் கைவிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், ஒலிம்பிக் கிராமத்துக்குள் எவரும் உள்நுழைய அனுமதிக்கப்படாமல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...