மேற்கு ஆபிரிக்கா நாடான கினியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற நோர்வே கப்பல் ஒன்று கடல் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக பல கப்பல்கள் காத்திருந்த நிலையில், குறித்த கப்பலே கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
#world