உலகம்செய்திகள்

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

Share
23 654f68c9b9c29
Share

அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம்

தமிழ்நாட்டை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்த்ததில்லை. அவர் ஐபிஎஸ் படித்திருக்கிறார். அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்றால், அண்ணாமலை களத்தூரில் தங்கியிருக்கும் போது வீட்டின் முன்பு கம்பம் நடுகிறார்கள்.

அதுவும், எந்தவித அனுமதியும் வாங்காமல் கம்பம் நடுகிறார்கள். நான் பார்த்ததை வைத்து தான் சொல்கிறேன். ஏன் அவர்கள் அதை அப்படி செய்கிறார்கள். கலவரம் பண்ண வேண்டும் என்றும், குதர்க்கம் பண்ண வேண்டும் என்றும் செய்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற அண்ணாமலை செயல்படுகிறார்.

குஜராத்திலும், புல்வாமாவிலும் எப்படி செய்தார்களோ ஆளுநர் மாளிகையிலும் அப்படி செய்கிறார்கள். இவர்களே ரவுடியை வெளியே கொண்டு வந்து வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு அப்படி வைக்கிறார்கள்” என்றார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...