இந்தியா- இலங்கை அகதிகள் முகாமில் பெண் உயிரிழப்பு: நடந்தது என்ன?

Death

இந்தியா- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த பெண்ணொருவர் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.

சேலம், சித்தர்கோவில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கலா (58) என்பவர் அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள பொதுக் கழிப்பிடத்துக்கு ச் சென்றபோது, அங்கிருந்த விஷப்பாம்பு அவரைத் தீண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தபோதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. விஷப்பாம்பு கடித்து இலங்கை தமிழ்ப்பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#SrilankaNews

Exit mobile version