யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஞ்சர்கடையிலிருந்து மண்டான் வீதிக்கு செல்லும் இடத்தில் மோட்டார் சைக்கிளும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment