” இனிவரும் தேர்தல்களில் நான் போட்டியிடப்போவதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
” இனி தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. மாறாக மக்களை வழிநடத்துவேன். பலமான மக்கள் அமைப்பு கட்டியெழுப்படும்.”- எனவும் அவர் கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் எமது மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கொடி சின்னத்தில், கம்பஹா மாவட்டத்தில் ரத்தன தேரர் போட்டியிட்டார். எனினும், அவர் வெற்றிபெறவில்லை. அக்கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment