” பன்டோரா ஆவணம் தொடர்பில் மட்டுமல்லாமல் 2016 இல் அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு உடன் ஆணையிடுங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
பனாமா ஆவணத்தில் 65 இலங்கையர்களின் பெயர்கள் இருந்தன. எனவே, அது தொடர்பிலும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான ஆலோசனையை உடன் வழங்கவும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பன்டோரா ஆவணம் தொடர்பில் லஞ்ச, உழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment