வெள்ளைச் சீனிக்குத் மீண்டும் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையைத் தாண்டி, சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா வரை அதிகரித்துள்ளது. அத்துடன், சந்தைகளில் விற்பனைக்காக சிவப்பு சீனி மாத்திரமே காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சீனி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment