whats app
செய்திகள்இந்தியா

இந்தியாவில் பலரின் வட்ஸ்அப் முடக்கம்

Share

இந்தியாவில் ஆடி மாதத்தில் இருந்து மொத்தம் 93 இலட்சம் பயனாளர்களின் கணக்குகளை வட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது.

கடந்த புரட்டாதி மாதத்தில் மட்டும் 22 இலட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை முடக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

அத்துடன், ‘ரிபோர்ட்’ வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின் படி, 50 இலட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் முறைப்பாடுகளைப் பெற்றது தொடர்பாகவும், அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...