இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் கார்த்திகை 19ல் தென்பட போகிறது.
மிகப்பெரிய சந்திர கிரகணம் இம்மாதம் அதாவது கார்த்திகை 19ஆம் திகதி தென்படவுள்ளது.
அக்கிரகணம்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணமாகும்.
இது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதே சந்திரகிரகணம் என்று அழைக்கப்படும்.
இந்த நிகழ்வு பெளர்ணமி நாளில் தான் ஏற்படுகின்றன.
சந்திரன் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுவதுமாக மறைத்தால் அது முழு சந்திரகிரகணம் என்றும், சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
கார்த்திகை 19ஆம் திகதியன்று 12:48 க்கு தொடங்கி 16:17க்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு கார்த்திகை 8ஆம் திகதி கண்களுக்கு தெரியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
Leave a comment