process aws
இந்தியாசெய்திகள்

சீன பொருளாதாரத்தை விட முன்னேற இந்தியா செய்ய வேண்டியவை.., அண்ணாமலை சொன்ன ஐடியா

Share

சீன பொருளாதாரத்தை விட முன்னேற இந்தியா செய்ய வேண்டியவை.., அண்ணாமலை சொன்ன ஐடியா

சீனாவின் வளர்ச்சியை இந்தியா எட்டுவதற்கு இந்த 2 வழிகளை பின்பற்றலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாணவர் ஒருவர் அண்ணாமலையிடம், “இந்தியாவின் பொருளாதாரம் 3.8 டிரில்லியனாக இருக்கிறது. சீனாவின் பொருளாதாரம் 18 டிரில்லியன் டொலராக இருக்கிறது.

அப்படி இருக்கும் போது சீனாவின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் முன்னேறும் என்று சில மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். அது எப்படி சாத்தியமாகும்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “இது ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி. சீனாவில் நம்மை விட 4 மடங்கு அதிகமாக செல்போன்களை தயாரித்து வருகிறார்கள். சொல்ல போனால் இந்தியாவை விட 4 – 5 மடங்கு அதிகமாக சீனா உற்பத்தி செய்து வருகிறது.

நம்மை விட 5 மடங்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 4 மடங்கு சாலை வசதிகள், விமான நிலையங்கள், விமானங்கள் என அதிக அளவில் சீனாவில் உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சுவது கடினமான விடயம் தான். ஆனால், சீனாவை மிஞ்சுவதற்கு இந்தியாவில் 2 விடயங்கள் உள்ளன.

ஒன்று, நம்மிடம் தான் அதிக மக்கள் தொகை உள்ளது. அதுவும் இளைஞர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். சீனாவில் முதியவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். நம் மக்களில் பலர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சீனாவில் பலர் ஓய்வு பெறக்கூடிய வயதில் உள்ளனர். அப்படி பார்த்தால் இந்தியாவில் 2034 – 35 -ம் ஆண்டில் 97 கோடி பேர் உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாவது, நம் நாட்டில் ஒரு அரசை பிடிக்கவில்லையென்றால் வேறொரு அரசை கொண்டு வர முடியும். ஆனால், சீனாவில் அப்படி இல்லை. அங்கு ஒரே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் தான் சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்கள் தவறான பொருளாதாரத்தை முன்னெடுத்தால் எப்போது வேண்டுமானாலும் சரியலாம்.

இந்த இரண்டு வழிகளை பின்பற்றினாலே அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை எட்ட முடியும்” என்றார்.

 

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...