பிரேசில் ஜனாதிபதிக்கு, காற்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, கொரோனா வைரஸைக் கட்டுப்படும் சுகாதார நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
அத்துடன் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும் அவர் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரேசிலில் நடந்த காற்பந்துப் போட்டியொன்றைப் பார்வையிடச் சென்ற அவருக்கு, மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் சா பாலோ நகரில் உள்நாட்டு காற்பந்துப் போட்டி இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் சா பாலோ நகரில் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்து வரும் அவர், அங்கு நடைபெற்ற காற்பந்து போட்டியைப் பார்பதற்காக அங்குள்ள மைதானத்திற்குச் சென்றார்.
ஆனால் மைதானத்தில் இருந்த அதிகாரிகள், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவரை மைதானத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து அவர் அவ்விடத்திலிருந்து கோபத்துடன் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment