வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சில மணி நேரத்தில் விசாரணைகளின் முன்னேற்றத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்” என்று உறுதியளித்துள்ளார்.