ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக ‘மூன்றாவது வழி’ எனும் வேலைத்திட்டத்தை விமல் வீரவன்ச உருவாக்கியுள்ளார் எனவும், இதன்படி மாகாண தேர்தலில் அவரின் கட்சி தனித்தே போட்டியிடும் எனவும் தெரியவருகின்றது.
மொட்டு கட்சிக்கும், விமல் அணிக்குமிடையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரச பங்காளிக்கட்சிகளின் பங்கேற்போடு உருவான 11 கட்சிகள் அணியிலும் விமலின் கட்சி முக்கிய இடத்தை வகிக்கின்றது.
விமல் தரப்பின் இந்த நகர்வானது மொட்டு கட்சியை சினம் கொள்ள வைத்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘மூன்றாவது வழி’யை உருவாக்கியுள்ளார் அமைச்சர் விமல்.
#SriLankaNews