எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 05 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 05 ஆம் திகதிஅனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
மேலும் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் பொலிஸார் கைது செய்துள்ளனர்
#IndiaNews
Leave a comment