திருமண வைபவங்கள் கட்டுப்பாடுகளுடன்!

66666

திருமண வைபவங்களை தற்போதைய சட்ட கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் நடத்துவது குறித்து கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவு திருமண சேவை வழங்குநர் சங்கம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைமை காரியலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய கொரோனாத் தொற்று பரவல் காரணமாக திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் மீண்டும் திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டலின் கீழ் குறைந்த பட்ச எண்ணிக்கையான விருந்தினர்களைக் கொண்டு திருமண நிகழ்வுகளை நடத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மதுபான விருந்தின்றி முழுமையான தடுப்பூசிகளை பெற்றவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதியளிக்கும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை கொவிட் – 19 கட்டுப்பாட்டு தேசிய செயலணியிடம் முன்வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version