கோட்டாபய ராஜபக்ஸ அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆளும் பங்காளிக் கட்சிகள், தேரர்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவருமே இன்று வீதிக்கு இறங்கிப் போராடும் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு இவ்வாறு சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment