தடைகளை கண்டு நாம் பின்வாங்க மாட்டோம்! – ரஞ்சித் மத்தும பண்டார

ranjith

” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொரோனாவால் நாட்டில் நாளாந்தம் 200 பேர் பலியானபோதுகூட கடும் கட்டுப்பாடுகளை அரசு உடன் விதிக்கவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே அரசு இப்படி செயற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் நடைபெறும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version