21 619561a3d27c0
செய்திகள்இலங்கை

வீரவன்ஸ, கம்மன்பிலவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்! – மனோ உறுதி

Share

அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பி, சற்று முன்னர் தம்மிடம் உறுதியாக தெரிவித்துள்ளார்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியவை வருமாறு,

விமல், உதய பதவிகள் ஆகியோரின் பதவிகள் காலி. இரத்தின தேரருக்கு பதவி இல்லை. இருந்தால் அதுவும் போயிருக்கும். இவர்கள் அரசியலில் இலங்கை இனவாத பிதாமைந்தர்கள். ஆகவே இவர்கள் மீது எவருக்கும் அனுதாபம் இல்லை. நாட்டில் ராஜபக்சர்கள் மீது பெரும் வெறுப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், விமல், உதய ஆகிய இருவரை விட ராஜபக்சர்களுக்கு ஏற்புடைமை உண்டு. இவர்களுக்கு அதுவும் இல்லை.

விமல், உதய இருவரும், ராஜபக்ச ஆட்சியின இன்றைய அலங்கோலங்களுக்கு பிரதான பொறுப்பு கூற வேண்டியவர்கள். ராஜபக்சர்கள், இனவாதத்தையும், மத அடிப்படைவாதத்தையும் தூண்டி விட்டே ஆட்சியை பிடித்தார்கள். அந்த விடயத்தை பொறுப்பேற்று தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் கொண்டு நடத்தியவர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு ஆகியோரே ஆகும்.

தமிழ்-முஸ்லிம் எதிர்ப்பு, இந்து-இஸ்லாம்-கத்தோலிக்க எதிர்ப்பு என்ற இன, மத அடிப்படைவாதங்களை இலங்கையில் ஸ்தாபனரீதியாக முன்னின்று நடத்தியவர்கள் இவர்கள் மூவரும்தான். அதை வரலாறு அறியும். நான் நன்கு அறிவேன். இந்த நிமிடம்வரைக்கூட திருந்தாத இவர்கள் இடம்பெறும் ஆட்சியில் இடம்பெற நான் தயார் இல்லை. இந்த நோக்கிலேயே எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்பியுடன் நான் உரையாடினேன். அதற்கு உரிய சிறப்பான பதிலை அவர் எனக்கு கூறியுள்ளார். அதையிட்டு மகிழ்வடைகிறேன்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ரத்தின ஆமதுரு இனவாத வினை விதைத்தார்கள். இன்று ஊழ்வினை வினை அறுக்கிறார்கள். “அறு தம்பி, அறு.., நன்றாக அறு..!” என நாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கத்தான் வேண்டும். சிங்கள ஊடகங்களில் நான் இவர்களை பார்த்துக்கொள்வேன்.

அரசில் இருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் வேறு சிலருக்கு இங்கே இடம் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இத்தகைய அக்மார்க் இனவாதிகளுக்கு இடமிருக்க முடியாது. இடம்தந்து மீண்டும் ஒருமுறை இன்னொரு சுற்றுவட்டம் போக முடியாது. அதை எமது தமிழ், முஸ்லிம் மக்கள் தாங்க மாட்டார்கள். பொறுக்க கூடாது. இன்று தேசிய சூழல், சர்வதேசிய சூழல் ஆகியவை பொருந்தி வருகின்றன. அவற்றை மீண்டும் பாழடிக்க இந்த இனவாதிகளுக்கு இடமளிக்க முடியாது. அத்தகைய எந்தவொரு முயற்சியையும் நான், முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து எதிர்ப்பேன்.- என்றுள்ளது

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...