WhatsApp Image 2022 03 05 at 10.45.05 AM
செய்திகள்அரசியல்இலங்கை

மலையக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! – மாத்தளையில் சாணக்கியன்

Share

“மலையக மக்களுக்காக 1949 இல் இருந்தே இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட நாமே சர்வதேச மயப்படுத்தினோம். எனவே, மலையக மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (05.03.2022) மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியம் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்தும், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்ய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்நிலைமை மாறவேண்டும். முற்போக்கான சிங்கள சகோதரர்களையும் இணைத்துக்கொண்டு இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும்.

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எமது கட்சி அன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டது. அதனால்தான் தமிழரசுக்கட்சிகூட தோற்றம் பெற்றது. எனவே, இப்பகுதிகளில் நாம் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும்கூட, மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆயிரம் ரூபா பிரச்சினையைக்கூட சர்வதேச மயப்படுத்தினோம்.

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா போதாது. 2000 ரூபா வழங்கப்பட்டாலும் சமாளிக்க முடியாத வகையிலேயே நாட்டில் விலைவாசி உள்ளது. – என்றார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...