” இந்தியாவுடன் இலங்கை சிறந்த நல்லுறவைப் பேண வேண்டும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை, இந்தியாவுக்கிடையில் பல நூற்றாண்டுகாலமாக நட்புறவு இருந்துவருகின்றது. அந்நாட்டில் இருந்தே பௌத்த மதம்கூட இலங்கை வந்தது. கலாச்சார ரீதியிலான உறவும் இருக்கின்றது.
எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்காக பிற நாடுகளுடன் உறவாடக்கூடாது என்றில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வகையிலேயே செயற்பட வேண்டும்.
ஆனால் இந்த அரசு நட்பு நாடுகளைக்கூட பகைத்துக்கொண்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இலங்கை மௌனம் காப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ரஷ்யா மற்றும் அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள வேண்டிவரும்.” – என்றார் ரணில்.
#SriLankaNews