” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதீடுமீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கை பொருளாதாரத்தின் இதயம்தான் மத்திய வங்கி. அந்த மத்திய வங்கியை கொள்ளையிட்ட முன்னாள் ஆளுநர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது எமக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு (எதிரணி) தெரியும்.
மத்திய வங்கியை அழிக்கும்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள்தான் இன்று நிதி முகாமைத்துவம் பற்றி கதைக்கின்றனர்.” – எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரம் முதல் திறக்கப்படும் என்ற தகவலையும் குறித்த விவாதத்தின்போது கல்வி அமைச்சர் வெளியிட்டார்.
#SriLankaNews