Imrankhan
செய்திகள்உலகம்

நாங்கள் ஜரோப்பிய யூனியனின் அடிமைகளில்லை!! – இம்ரான் கான்!!

Share

நாம் ஒன்றும் ஜரோப்பிய யூனியனின் அடிமைகளில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உக்ரைன் ரஸ்யா போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. அப்போது ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன.

இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1-ந்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்யனுமா?.

ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?’’ என்றார்.

மேலும், நாங்கள் ரஷியாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்டபாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்டபாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...