அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்! – பங்காளிக் கட்சிகள்

mahi gott

” ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்.” – என்று அறிவித்தல் விடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகி வருகின்றனர் எனவும் வெளியாகும் தகவல்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

” தேசிய வளங்களையும், நாட்டையும் பாதுகாக்கவே 69 லட்சம்பேர் எமது அணிக்கு வாக்களித்தனர். எனவே, மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக நாம் அரசுக்குள் இருந்துகொண்டு போராடுவோம்.

ஆட்சி மாற்றமோ, ஆட்சி கவிழ்ப்போ எமது நோக்கம் அல்ல. இந்த அரசை முன்னோக்கி அழைத்துச்சென்று, நாட்டை பாதுகாக்க வேண்டும். பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேச்சுமூலம் தீர்க்கவே முற்படுகின்றோம்.”- என்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Exit mobile version